தொடரும் கனமழை! அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!1430815421
தொடரும் கனமழை! அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் பல தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில், அங்கு அடுத்த மூன்று நாள்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையானது, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், குறிப்பாக மும்பை பகுதிக்கும் விடுக்கப்பட்டுள்ளது. போலவே இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகாவின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடகிழக்கு மாநிலங்களில் மழை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்து பலர் உயிரிழந்த நிலையில், அங்கு படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.