2 நாட்களுக்கு முன்பே மாவட்ட காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை!1038115308
2 நாட்களுக்கு முன்பே மாவட்ட காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை! கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி பெரும் கலவரம் மூண்டது. இந்த நிலையில், கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்ட...