6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள்! காரணம் என்ன? ஓலா, மீஷோ etc.......,?1723084985
6000 பேரை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனங்கள்! காரணம் என்ன? ஓலா, மீஷோ etc.......,? இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதிலும், அவற்றின் மதிப்பீட்டை அதிகரிப்பதிலும் தங்களது குறிப்பிடத்தக்க அடையாளத்தை பதித்து வருகின்றன. வென்ஞ்சர் இண்டெலிஜென்ஸ் அறிக்கையின் படி, 2022ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டு கணக்கில் இந்திய ஸ்டார்ட்அப்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன. இதே ஆண்டு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 5.7 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன. தற்போது அதைவிட 50 சதவீதம் அதிகமாக முதலீடு திரட்டப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்குப் பிறகு, நிறுவனங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கையை ஒழுங்கமைக்க முயன்று வருகின்றன. பிசினஸ் இன்சைடரின் கணக்கீடுகளின்படி, இந்திய ஸ்டார்ட்அப்கள் 6,900க்கும் மேற்பட்ட ஊழியர்களை விடுவித்துள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3000 பணியாளர்களை Better.com 3,000 பணி நீக்கம் செய்துள்ளது. பெட்டர் டாட் காம்: அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் பெட்டர் டாட் காம் (Better.com) மார்ச் 2022 இல், அதன் அம...