கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் சிறையில் அடைப்பு1881361246
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் சிறையில் அடைப்பு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.