தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை – நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!
கொரோனா வைரஸின் 4ம் அலை பரவல், ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சம் தொடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா 4ம் அலை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் 3ம் அலை பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசின் தீவிர முயற்சிகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்குமோ? என அஞ்சப்படுகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
Comments
Post a Comment