நாடு முழுவதும் பாரத் பந்த் – போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!
மத்திய அரசை கண்டித்து, தொழில் சங்கங்கள் அறிவித்த 2 நாள் போராட்டம்,காரணமாக மொத்த நாடும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரண்டு நாள் ஸ்டிரைக்:
மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம், இன்று காலை 6மணி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி, அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி,எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
Comments
Post a Comment