வீடுகளில் செல்போன் திருடியவர் சிக்கினார்
பெரம்பூர்: வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளில் தற்போது இரவில் பலர் காற்றுக்காக தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குகின்றனர். இதை பயன்படுத்தி இங்குள்ள வீடுகளில் செல்போன்கள் திருடு போவதாக வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாசர்பாடி மெகிசின்புரம் பகுதியை சேர்ந்த சரத், வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது செல்போன் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வியாசர்பாடி மல்லிப்பூ காலனி 5வது தெருவை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment