அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!


அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!


புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. 

தமிழக  கடற்கரை, குமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் எனவும்,  தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரை, குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டி இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

Visiting the most astonishing abandoned places in the world in photos #Photos