ஐபிஎல் 2022: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் எவை எவை?
ஐபிஎல் 2022: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் எவை எவை?
ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் எவை என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டன
நேற்றைய போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி வீழ்த்தியதை அடுத்து புள்ளிகள் அடிப்படையில் பெங்களூர் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது நான்காவது அணியாக பெங்களூர் அணி தகுதி பெற்றுள்ளது .
இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டி வரும் மே 29-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Comments
Post a Comment