மகள் கண் முன்னே தந்தை உடல் நசுங்கி பலி! திருவாரூரில் சோகம்!


மகள் கண் முன்னே தந்தை உடல் நசுங்கி பலி! திருவாரூரில் சோகம்!


திருவாரூர் மாவட்டம் பள்ளிவராமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி (60). இவர் தனியார் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சௌமியாவும் (22) அதே ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீரமணியும், அவரது மகளும் தனித்தனி சைக்கிளில் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது கேக்கரை என்ற இடத்தில் எதிரே வந்த மணல் லாரி ஒன்று வீரமணியின் சைக்கிள் மீது மோதியது.

 

இதில், மகள் கண் முன்னே வீரமணி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.‌ தகவலறிந்த, அப்பகுதி மக்கள் வீரமணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று சிறைபிடித்தனர். தொடர்ந்து வீரமணியின் சடலத்துடன் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் சட்டவிரோதமாக சென்று வரும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுத்துவதாகவும், இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த வீரமணி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்சல் வலியுறுத்தி வருகின்றனர். மகள் கண்ணெதிரே தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

25 Healthy Meal Prep Ideas To Simplify Your Life