Keerthy Suresh : அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை கீர்த்திசுரேஷ்…!


Keerthy Suresh : அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை கீர்த்திசுரேஷ்…!


நடிகைகீர்த்தி சுரேஷ்இந்தி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்ததில் இருந்தே அவரது பழைய அழகு குறைந்து விட்டதாக ரசிகர்கள் ரொம்பவே வருத்தம் தெரிவித்து வந்தனர்.மீண்டும் தனது பழைய அழகை திரும்ப கொண்டு வரும் முயற்சியில் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உதட்டிற்குபிளாஸ்டிக் சர்ஜரிசெய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தை பார்த்த ரசிகர்களும் இதே கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, சர்கார், சண்டக் கோழி 2, நடிகையர் திலகம் படம் வரை கும்முனு இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை மொத்தமாக குறைத்தார்.

தனுஷை ஓவர் டேக் செய்த சிவகார்த்திகேயன்...அடேங்கப்பா..!

படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அவரது தோற்றம் மோசமாக மாறியதே அந்த படத்தில் அவருக்கு வந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் பிரியாமணிக்கு அந்த வாய்ப்பு சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நயன்தாரா, சமந்தாவை தூக்கிச் சாப்பிட்டு முன்னணி நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருதும் வென்று மற்ற தென்னிந்திய நடிகைகளை பொறாமை கொள்ளச் செய்தார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

விறுவிறுவென ஏறிய அவரது மார்க்கெட் அவரது உடல் எடை குறைப்புக்குப் பின்னர் அப்படியே சரிந்து விட்டது. அதற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்திலும் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் அஜித்துக்கு தங்கச்சியாக நித்யா மேனன் வேதாளம் படத்தில் நடித்ததன் பிறகு தான் அவரது மார்க்கெட் முற்றிலுமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தனது தோற்றத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், மீண்டும் அழகாக மாற வேண்டும் என்கிற முனைப்புடன் உடற்பயிற்சி உள்ளிட்ட ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் உதடுகள் வித்தியாசமாக இருப்பதை நோட் பண்ண அவரது ரசிகர்கள் தான் இப்படியொரு கேள்வியை எழுப்பி உள்ளனர். ஆனால், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog

25 Healthy Meal Prep Ideas To Simplify Your Life