பொள்ளாச்சி ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு167207478
பொள்ளாச்சி ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆழியார் அணையை சுற்றி பார்க்க பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவியில் குளித்துச் செல்வார்கள்.
தற்போது வால்பாறை கவர்கல் மற்றும் சக்தி எஸ்டேட் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி எனப்படும் கவி அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முழுவதும் வால்பாறை பகுதியில் பெய்த மழையால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பெய்து பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு நீடிக்க வாய்ப்பு இருக்கு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆழியாறு கவி அருவி வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் வால்பாறை சாலையில் உள்ள கொண்டை ஊசி மலை சாலைகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சாலைகளில் ஆங்காங்கே நிற்க வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆழியார் அருகே உள்ள தாடகைநாட்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கோபாலசாமி மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளி போல் நீர் கொட்டி வருகிறது.
மேலும் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment