3 நாட்கள் தொடர் விடுமுறை! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை? - போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை2104709331
3 நாட்கள் தொடர் விடுமுறை! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை? - போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை
3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருச்சி செல்ல தனியார் பேருந்துகளில் 800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், கோயம்புத்தூருக்கு 3,000 ரூபாய் வரையும், மதுரைக்கு 3,500 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
கூடுதல் கட்டணம் தொடர்பாகப் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மக்கள் புகாரளிக்கலாம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment