எத்தனையோ பேர் கிட்ட என் போன் நம்பர் இருக்கு. ஆனா தோனி மட்டும் தான் பண்ணாரு – விராட் கோலி நெகிழ்ச்சி1139328637
எத்தனையோ பேர் கிட்ட என் போன் நம்பர் இருக்கு. ஆனா தோனி மட்டும் தான் பண்ணாரு – விராட் கோலி நெகிழ்ச்சி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான “சூப்பர் 4” சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்து கொண்டது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட விராத் கோலி தோனி குறித்து பல்வேறு நிகழ்ச்சியான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தோனி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி கூறுகையில் :
நான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான். என்னுடைய செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. ஆனால் தோனி எனக்கு மெசேஜ் அனுப்பி என்னை ஆசுவாசப்படுத்தினார்.
அதோடு தோனி மீது கொண்டுள்ள மரியாதை மற்றும் பிணைப்பு உண்மையானது. அவரும் என் மீது அன்பு வைத்திருக்கிறார் என்று விராட் கோலி குறிப்பிட்டார். அதோடு தோனி என்னால் பாதுகாப்பற்றவராக உணரவில்லை. அதேபோல் அவரால் நான் பாதுகாப்ற்றவராக உணரவில்லை என விராட் கோலி கூறினார்.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே பார்மின்றி தவித்து வருகிறார். அதோடு அவர் சதம் அடித்தும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அவர்மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரிலும் அசத்துவார் என நம்பலாம். அதேபோன்று இடையிடையே கொடுக்கும் பேட்டிகளில் தொடர்ச்சியாக தோனி குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை அவர் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment