அவதார் 2 அட்ராஷிட்டி...அவதாரை போலவே மாறிய ஊழியர்கள்...குஷியில் ரசிகர்கள்!
அவதார் 2 அட்ராஷிட்டி...அவதாரை போலவே மாறிய ஊழியர்கள்...குஷியில் ரசிகர்கள்!
அவதார் 2 திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கில் ரசிகர்களை கவர்வதற்காக அவதாரை போல் மாறி திரையரங்க ஊழியர்கள் உற்சாகப்படுத்தினர்.
அவதார்:
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை பார்த்துவிட்டு இப்படி ஒரு சயின்ஸ்பிக்ஷன் திரைப்படமா என அப்போது வியக்காதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை திருடிய படமாக அமைந்தது அவதார்.
அவதார் 2:
இதைத்தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகமான ”அவதார் - தி வே ஆப் வாட்டர்” படம் உலக அளவில் கடந்த 16 ஆம் தேதி வெளியானது. மிக பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
அவதாரை போல் மாறிய ஊழியர்கள்:
இந்நிலையில் அவதார் 2 படத்தை திரையரங்கில் பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை கவரும் நோக்கத்தில், புதுவை கடலூர் சாலை வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடமணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
Comments
Post a Comment