வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடுகிறது...! சென்னை, ஆண்டுக்கு ஒருமுறைஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றதேர்தல் ஆணைய விதியின் அடிப்படையில், கடந்த23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆனால், பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோதே, "ஒற்றை தலைமை" கோஷம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால், பொதுக்குழுவை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட அதே நேரத்தில், கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதும் கையெழுத்து போடவில்லை. கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன...